மலையாளிகள் துரோகங்கள் - ஈழம்


சமீபத்தில் குங்குமம் இதழ் நேர்காணலில் மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயரிடம் கேள்வி ஒன்று கேட்கப்பட்டது ”இலங்கை பிரச்சனை பற்றி என்ன கருதுகிறீர்கள்?” “எனக்கு அதுபற்றி ஒன்றும் தெரியாது, சிங்களர் பக்கம் சரியா தமிழர் பக்கம் சரியா என்றும் எனக்கு தெரியாது. எனவே எனக்கு இலங்கை பிரச்சனை பற்றி ஒன்றும் தெரியாது.” இதுவே எம்.டி.வாசுதேவனின் பதில். இதை அறியாமை என்றும் கொள்ளலாம் அகந்தை என்றும் கொள்ளலாம்.

கால காலமாக ஈழ போராட்டத்தின் மீது மலையாளிகளுக்கு பெரும் காழ்ப்புணர்வு இருக்கிறது. வரலாற்று ரீதியாக பார்த்தால் 1920களில் சிங்களவர்கள் மலையாளிகளை தாக்கத்துவங்குகிறார்கள். மலையாளிகள் இலங்கையைவிட்டு வெளியேறுகின்றனர். வெளியேறிய மலையாளிகளின் எண்ணிக்கை சொற்பமே. ஏ.எம்.கோபாலன் போன்ற கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் இந்த வெளியேற்றத்தை தடுக்கவும் மலையாளிகளை காக்கவும் முயன்றார்கள். அதில் தோல்வியும் அடைந்தார்கள் (வர்க்க பாசத்தை விட மலையாள பாசம் மேலானது அல்லவா).

நியாயமாக இந்த வரலாற்றின் அடிப்படையில் மலையாளிகள் தமிழர் போராட்டத்தை ஆதரித்திருக்க வேண்டும். ஆனால் பின்னதாக நடந்த மலையாளம் மற்றும் சிங்கள ஆளும் வர்க்க இணக்கத்தின் அடிப்படையில் எங்கே தமிழர்களுக்கு ஒரு தனி நாடு கிடைத்துவிடுமோ என்கிற வன்மத்தின் அடிப்படையிலும் ஈழப்போராட்டத்திற்கு எதிராக மலையாள உயர்மட்ட ஆளும் வர்க்க குழாம் இயங்கியது, இயங்குகிறது என்ற நம்பிக்கை எனக்கு திடமாக உண்டு.

நாம் பலவற்றை நிரூபிக்க முடியாது ஆனால் நம் உள்ளுணர்வு அறியும் இது இப்படித்தான் என. எனக்கு பலகாலம் இப்படியான உள்ளுணர்வே இருக்கிறது. ஈழத்துக்கு எதிராகவே செயல்படுவது அதைக்குலைப்பது அதுவே அவர்களின் மறைமுகத்திட்டம். இந்த போராட்டம் தொடங்கிய காலத்தில் இருந்து எத்தனை மலையாள அதிகாரிகள் ராணுவத்திலும் உளவுத்துறையிலும் உயர் மட்டத்துறையிலும் செயல்பட்டிருக்கின்றனர். இதன் பொருள் மற்ற தேசிய இன அதிகாரிகள் இப்படி நடக்கவில்லை என்பதல்ல அவர்கள் இந்திய அரசின் பிரதிநிதியாக செயல்பட்டார்கள். இதயத்தில் தனிப்பட்ட வன்மத்துடன் செயல்பட்டது இவர்கள் மாத்திரமே.

சிவசங்கரமேனனின் குடும்பம் தலைமுறை தலைமுறையாக இந்திய வெளியுறவுச்செயலர் பதவியில் இருக்கிறது. அவர் ஒரு நேர்காணலில் சொன்னார் “ எனக்கு இப்போது இலங்கையில் ஆண் நண்பர்களே இல்லை, இருப்பதெல்லாம் என் சிங்கள நண்பர்களின் விதவை மனைவிகள் மாத்திரமே.” இவர் எப்படி செயல்பட்டிருப்பார் ஈழப்பிரச்சனையில்?
சிவசங்கர மேனன்களும், எம்.கே.நாராயணன்களும், ஆண்டனிகளும் இன்னும் நமக்கு பெயர் தெரியாத எத்தனையோ மலையாள அதிகாரிகளும் இன்ன பிறரும் இந்தியாவின் பாத்திரத்தை தீர்மானித்தார்கள். இறுதி யுத்தத்தை நடத்தினார்கள். கால காலமாய் தமிழர்களை வெறுப்பவர்கள் அவர்களின் தலைவிதியை தீர்மானித்தால்? அதுவே நடந்த முடிந்த கோர இறுதி யுத்தம்.
இறுதி யுத்தம் முடிந்த பின்பு ஐக்கிய நாடுகள் சபை அதன் பிரதிநிதியை அனுப்பியது. அங்கும் வந்தார் ஒரு விஜய் நம்பியார் “ எல்லாம் சரியாக இருக்கிறது” என்று அறிவித்துவிட்டும் போனார். ஒரு வேளை இன்றைய மத்திய மந்திரி சசி தரூர் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளராக வெற்றி பெற்றிருந்தால் இந்த யுத்தத்தை மூன்று வருடத்திற்கு முன்பே துவங்கி இருப்பார்.

எல்லா சிங்கள ஆளும் வர்க்க தலைவர்களும் எப்போதும் கேரளம் வருகிறார்கள். அவர்கள் பௌத்தர்களாக இருந்தாலும் குருவாயுரப்பனை தரிசிக்கிறார்கள், யாகங்கள் நடத்துகிறார்கள் மலையாள மாந்திரீகங்கள் ஈழத்தமிழர்களின் மண்டையோடுகளிலேயே நடந்தன. இறுதி யுத்தத்திற்கு பின்பு இலங்கையின் முன்னாள் அதிபர் சந்திரிகா கேரளத்திற்கு வந்திருந்தார் அவர் திருவனந்தபுர மன்னர் அரண்மனை உப்பரிகையில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை மலையாள மனோரமா வெளியிட்டது. தன் சொந்த வீட்டில் இருப்பது போல் அமர்ந்திருந்தார் சந்திரிகா.

தமிழர் வாழ்வில் மறக்கமுடியாத 2009 ஏப்ரல் மே மாதங்களில் நான் கேரளத்தில் இருந்தேன் தமிழ்நாடு கொந்தளித்துக்கொண்டிருந்தது. கேரளத்தில் இருந்து ஈழத்திற்கு ஆதரவாக ஒரு குரல், ஒரு ஆதரவு, ஒரு முனுமுனுப்பு ஒன்றும் கிடையாது. எனக்கு தெரிந்து ஈழத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்த ஒரே மலையாளி எழுத்தாளர் அருந்ததிராய் மட்டுமே(அவர் பாதி மலையாளி என்பதால் ஒருவேளை அப்படி இருந்திருக்கக்கூடும்). முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியும் மனித உரிமை ஆர்வலருமான கிருஷ்ணய்யர் கூட எதிர்மறையாகத்தான் பேசினார்.

சி.பி.எம் என்பது ஒரு தமிழர் விரோத கட்சி என்பதை இந்த யுத்தம் ரத்தத்தின் வழி நிரூபித்தது. சி.பி.எம்மை எப்போதும் தீர்மானிப்பவர்கள் மலையாளிகள் கொஞ்சம் வங்காளிகளும். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கமெல்லாம் மொத்தமாக Mass Suicide செய்து கொள்ளலாம். எல்லாம் முடிந்த சாம்பல் மேட்டில் நின்று அதன் பொதுச்செயலாளர் எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் சொல்கிறார் “ஈழ விஷயத்தில் நாங்கள் நடந்து கொண்ட விதம் தவறுதான் என்பதை நினைத்து வருந்துகிறோம்”

தமிழர்களை எப்போதும் நிரூபிக்க முடியாத சதிகளும், குற்றங்களும், கொடூரங்களும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. எங்கள் சாலைகள் வழியே போகின்ற டாங்கிகள் எங்களை கொல்வதற்கு இல்லை என்றார்கள். அந்த டாங்கிகளும் கொச்சி வழி கடல் ஏகின.

நான் பேசிக்கொண்டிருப்பவை அனைத்தும் உள்ளுணர்வின் தடத்தில் வரலாற்றில் இவை எல்லாம் பேசப்படாமல் அதன் புதைகுழியில் அழுந்திப்போகலாம் மக்கிப்போகலாம். யூதர்களுக்கு எழுதியது போல எவரேனும் எழுதப்போகிறார்களா இந்த சதி வரலாற்றை.
ஒரு உணர்வுள்ள தமிழன் குறைந்தபட்ச சமூக உணர்வு உடையவன் 2009 ஏப்ரல் மே நாட்களை குறைந்தபட்ச மனபிறழ்வு இல்லாமல் கடந்திருக்க முடியாது. சமூகவியல் ஆய்வாளர் தொ.பரமசிவம் ஒரு மேடையில் சொன்னார் ”தூக்கமற்ற இரவுகள் இவை” என்று. நான் வாழ்வதற்கான நம்பிக்கையின் பெரும்பகுதியை இந்த 2009 மே மாதம் பிடுங்கிவிட்டது இதற்கு பிறகும் நான் வாழ்கிறேன்.

என் ஆதர்ச மகா நடிகன் மோகன்லால் இந்திய ராணுவத்தில் கௌரவ கர்ணல் ஆகிவிட்டார். அடுத்த யுத்தத்திற்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ஆண்டனி அவரையும் அனுப்புவார், லாலேட்டனின் துப்பாக்கி இந்த தமிழ் ரசிகனையும் கொல்லும்.

- சாம்ராஜ்

Comments