அரங்கு ஒழிந்த இரவு

துரோகத்தின் 
வெம்மையான
வசன பாக்கள்
காற்றில் அலைகின்றன.

புருட்டஸும் சீசர் மனைவியும்
ஒரே அறையை பகிர்ந்து
கொள்கின்றனர்.சீசர் தீர்க்கமாய் புகைத்துக்
கொண்டிருக்கிறான்.
திரைச்சீலைகள் ரகசியங்களால்
விம்முகின்றன.

பெருக்க வருபவளின்
காலை வாரியலில்
இழுபட கூடும் 
கோமாளியின் கண்ணீர்.
பார்வையாளர்களின் இருக்கைகள்
மோன தியானத்தில்.

நாளை மாலை மீண்டும்
ரோமபுரி நூற்றாண்டு பிறக்கும்.
அதுவரை இருபத்தியோராம்
நூற்றாண்டு இருளில் கிடக்கும்

Comments