இப்படியாகுமெனில்


ஸேம் ஸேம் பப்பி ஸேம்
என்று சின்ன வயதில்
ஒடியவள்.
  
எட்டு வயதில் முழங்காலுக்கு 
மேலான காயத்தை 
அப்பாவுக்கு காட்ட
மறுத்தவள்.

உடை மாற்றும் 
அறைக்குள் அம்மாவைக்கூட
அனுமதியாதவள்.

எக்ஸ்ரே
அறையிலிருந்து 
ஒடிவந்தவள்

அருவிகளில்
ஒரு பொழுதும் 
குளிக்காதவள்.

வெளிச்சத்தில் 
கணவனுடன் கூடச் 
சம்மதியாதவள்.

மரித்தலுக்கு பின்
அம்மனமாய் கிடக்கிறாள் 
மார்சுவரியில்.

ஈக்களும் கண்களும்
அங்கேயே” மொய்க்க,
இப்படியெல்லாம் ஆகுமெனில் 
அன்புலட்சுமி தற்கொலையே 
செய்திருக்கமாட்டாள்.

சாம்ராஜ்

Comments