பழைய காதலிகள்

    [1] 
     உன்
    குரலை மாத்திரம்
    கேட்கும் பொருட்டு
    பொது தொலைபேசியிலிருந்து
     உன்னை அழைத்தேன்
    வருடங்கள்
    .உன் குரலை
    ஒன்றும் செய்திடவில்லை
    நெடுச்சாலையில்.
    விரையும் வாகனங்கள்
    என் மெளனத்தின் வழி
    நானென அறிந்திருப்பாய்
    கூடவே சாலையின் நடுவே
    நசுங்கி கிடக்கும் நாயையும்
    நம் காதலையும்
    நீ முகர்ந்திருக்க கூடும்.
          [2]
        கடவுளென

 ஓராயிரம் முறை உச்சரித்த பெயர்
   இனையத்தில் இப்பொழுது
  ஆறு கரும்புள்ளியாயிருக்கிறது.
  கடவுளென ஆராதிக்கப்பட்டவர்கள்
  கடவுச்சொல்லாகி போனார்கள்.
  வேறுபாடொன்றும் இல்லை
  செயற்கைகோளில் பால் வீதிகளில்
  அலைந்து கொண்டிருக்கிறார்கள்
  பழைய காதலிகள் இப்பொழுதும். 
  தீராச் சாபங்களோடு
  மற்றவர்கள்
 ‘உடைத்து நுழைவதற்காகவே’
 கடவுச் சொல்லாய் காத்திருக்கிறார்கள்
பழைய காதலிகள். 


சாம்ராஜ்.

Comments