12, தாமஸ் தெரு கோட்டயம்

 
கொடியில்
 வெள்ளை அங்கிகள் படபடக்கும்.
 மோன அமைதியெங்கும்.
 நேர்த்தியாய் வெட்டபட்ட
 புற்களும்செடிகளும்.
 பறவைகளும் பயபக்தியாய் பறந்தமரும்.
 பியனோவில் கசியும் ஆகம சங்கிதம்.
 சிலுவையில் குருதி சிந்தும் கர்த்தன்.
 கைபிடிசுவருக்கு அப்பால் கிடக்கும்
 விஸ்பர்களும்விசும்பல்களும்
                 
. [2] 

 மாலை பிராத்தனை நேரத்தில் 
 மடத்தின் பின் வாசலருகே
 புனர ஆரம்பித்தன நாய்கள்.
 இரும்பு கதவை
 இழுத்து  மூடினாள் கன்னியாஸ்திரி.
 அந்தரங்கம் அனுமதித்ததற்கு
 நன்றி சொல்லி
 மேலும் சந்தோசமாய் புனர்ந்தன
.இந்திரன் உடம்பாயிற்று இரும்புகதவு.

சாம்ராஜ்.

Comments