எதுவும் அறியா மலைகள்

அன்றாடம் மொட்டை மாடியில்
துணிகளை காயப்போடும்
சொற்ப அவகாசத்தில்
தூரத்தே தெரியும்
மலையின் நீல விளிம்புகளுக்கு
பறந்து செல்வாள் மரிய புஸ்பம்
அதன் உச்சியிலிறங்கி.
சறுக்கி கொண்டு போவாள்
தன் பால்யத்தின் தோட்டத்திற்கு.
   
அன்றொரு நாள்
நேரமாகிவிட்ட பதட்டத்தில்
படிக்கட்டுக்கு பதில்
புகைக்கூண்டு வழி
வீட்டினுள் நுழைந்தாள்.

எதுவுமறியா
மலைகள் காத்திருக்கின்றன
மரிய புஸ்பத்திற்கு
யுகங்களாய். 

Comments