காற்றில் கரையாத பாடல்




காற்று அடித்துக்கொண்டு போக, காலப்போக்கில் சருகுகள் மட்க, உள்ளிருந்து அரிக்கும் என்றும் மரிக்காத ஓர்மைகள் இவை.

*****

வேட்டி மடிப்பிலிருந்து இலைவிபூதியை எடுத்து எதிர்வந்த அம்மாவிடம் கொடுத்தேன். எப்பொழுதும் அம்மா, ‘முருகா' என்றபடி திரு நீறு பூசிக் கொள்வாள். அதையும் அன்று சொன்னாளா இல்லையா? எதுவும் நினைவில்லை. சொல்லி இருக்க லாம். அவள் வாய் திறந்து சொல்கிற ஒன்றிரண்டு அபூர்வ வார்த்தைகளில் அதுவும் ஒன்று. மிச்சமெல்லாம் சொல்லாதவை.

காற்றின் பாடல், பக்கம் 24!

நடு இரவில் தல்லாகுளத்தில் போர் போட்டுக் கொண் டிருக்கிறார்கள். மனிதர்களின் உறக்கத்தோடும் கனவுகளோடும் எந்திரம் கதைத்துக் கொண்டு இருக்கிறது. யாரோ சொல்கிறார்கள்,“காலைக்குள்ள 500 அடி போயிரும். தண்ணீ வருதானு பார்ப்போம்”. இந்த கோடைக் காலத்தில் நொறுங்கும் பாறைகளின் வழி இயற்கை விடாது தன் ரெளத்திரத்தைக் காட்டிக் கொண்டு இருக்கிறது. 500, 600, 700 என எத்தனை அடிகள் தோண்டினாலும் தண்ணீர் இல்லை.

ஏறக்குறைய தமிழ் கதை வெளியும் அப்படித்தான் இருக்கிறது. 500, 600, 700 அடி என தோண்டி படைப்பாளிகள் வெறும் சல்லிகளைப் பரப்பிக் கொண்டு இருக்கிறார்கள்.

நீர் வந்தால்தானே பச்சை துளிர்க்கும்?”

வெறும் தூர்ந்த துளைகளாக இருக்கின்றன நம் கதை வெளிகள். சிறுவர்~ சிறுமியர் அறியாது வீழ்ந்து 3 நாட்கள் போராடி உயிர் விடுவதற்கான ஏற்பாடாயிருக்கிறது. பின்னிரவுகளில் அத்துளைகளிலிருந்து வெற்று ஊளைகள்  எழுகின்றன.

கலாப்ரியா பத்து வருடங்களுக்கு முன்னால் உரை நடைக்கு வருகிறார். கலாப்ரியாவின் பலம், அவருக்கு சொல்வதற்கு ஏராளமாக இருக்கிறது. அதை கலை நேர்த்தியுடன் சொல்ல முடிகிறது. தோண்டிய 5 ஆவது அடியிலே அவரது அனுபவ ஊற்றிலிருந்து நீர் பெருகி வருகிறது. விதவிதமான மாந்தர்கள், அனுபவங்கள். “சந்தன பொதிகையின் தென்றல் என பெண் ணாள்என்ற ஒரே பாடலை மட்டும் எழுதிய கிருஷ்ண மூர்த்தி, தா. மணி, கடலை நிறுத்தும் கேரள செண்டை மேளக்காரர்கள், ரீபிலில் தொலைந்து போன பேனா ரிப்பேர் செய்பவர், பேச்சாளன் பிரமு, சாவதற்கு சயனைடும் மறுக்கப்பட்ட ஆசாரிகள், சபரிமலை பொதி சுமக்கும் காக்கையன், நாற்பது வருடங்களுக்கு முன்னால் அனாதையாக கிடக்கும் சபரிமலை, திருநெல்வேலியிலிருந்து உப்பும் அல்வாவும் வருவதற்காக காத்திருக்கும் அய்யப்பன் கோவில் மேல் சாந்திகள், அப்பாவின் சிநேகிதர்கள், சிந்திய உப்பைத் தேடி ஓடி வரும் யானைகள், தூணுக்குள் மறைந்துபோன ஆச்சிகள், ரகசியம் காக்க நாக்கை அறுத்துக் கொண்ட அண்ணாச்சி, தங்கபஸ்பம் தேடி அலையும் நிலக்கிழார்கள், இப்படி மனிதர்கள், மனிதர்கள்....

இந்த ஞாபகத் தொடரின் 20 அத்தியாயங்களில் 10 நல்ல சிறுகதைகள் ஒளிந்திருக்கின்றன. சபரிமலை அத்தியாயத்தை தனியாக ஒரு திரைப்படமாக எடுக்கலாம். கலாப்ரியாவுக்குள் எப்பொழுதும் ஒரு சினிமாக்காரன் இருக்கிறான். ஒரு நிகழ்வை அதற்கான ஒளியோடு, காட்சி கோணத்தோடு, பின்னணி சப் தங்களோடு அதன் வண்ணத்தோடு நமக்கு கலாப்ரியா காட்சிரூபமாய் கையளிக்கிறார்.

வரிகளுக்கிடையே வாசிப்பவர்களுக்கு ஏராளமான கண்ணிவெடிகளைப் பொதித்துவைத்து இருக்கிறார். அப்படியான கண்ணிவெடிகளை நாம் கண்டடையும் போது சேதாரங்கள் எதுவும் விளையாமல் சிறகு முளைக்கவே வைக்கிறார். கலாப்ரியா சினிமா உலகத்திற்குப் போயிருக்க வேண்டும் (இனி போனாலும் ஆச்சரியமில்லை).

அவருடைய நினைவின் தாழ்வாரங்கள், ஓடும் நதி, உருள் பெரும் தேர் ஆகிய முத்தொகுப்பின் (Trilogy) தொடர்ச்சி போலவும் இதை வாசிக்கலாம். ஒரு கவிஞன் உரைநடைக்கு வரும்போது அவர் தொட்ட தெல்லாம் பொன்னாகும். அவனுக்கு எதைத் தொடவேண்டும் என்று மாத்திரம் தெரிந்திருக்க வேண்டும். கவிதையிலிருந்து உரைநடைக்கு வரு கின்றவர்கள் பெரும்பாலும் வெல்கிறார்கள். உரை நடையிலிருந்து கவிதைக்குத் திரும்பியவர்கள் எப்பொழுதும் தோற்கிறார்கள். கலாப்ரியாவின் பலம், அவருக்கு எதைத் தொடவேண்டும் என்று தெரிந்திருக்கிறது

காற்றில் பாடல்கள் கரைவதாய் சொல்வது எப்பொழுதும் நம் வழக்கம். ஓர்மையின் பாடல்கள் ஒரு பொழுதும் அழிவதில்லை. அதுநம்மைவிட்டுப் பிரிவதும் இல்லை விலகுவதும் இல்லை”. கர்த்தனுக்கு முன்பிருந்தே

 கலாபிரியாவின் கட்டுரைத் தொகுப்பு சுவரொட்டிக்கு எழுதிய முன்னுரை.

Comments